உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு விபத்து காப்பீடு திட்டம் அஞ்சலகங்களில் நாளை துவக்கம்

சிறப்பு விபத்து காப்பீடு திட்டம் அஞ்சலகங்களில் நாளை துவக்கம்

சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நாளை துவங்கி வரும் 28ம் தேதி வரை நடக்கின்றது.பணிபுரியும் இடம், வீடுகள், பயணங்களின் போது எதிர்பாராத விபத்து ஏற்படும், விபத்தில் சிக்கியவரின் குடும்பமே நிலைகுலைந்துபோய் விடுகிறது. வருவாய் இழப்பு, கடன், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, குடும்பத்தின் எதிர்காலம் என அனைத்துமே கேள்விக்குறியாகி விடுகின்றன.இதனை கருத்தில் கொண்டு எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியும் இணைந்து துவங்கியுள்ளன. இந்த விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நாளை 24ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.இது குறித்து புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கமால் பாஷா கூறியதாவது: இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இணைத்துக் கொள்ளலாம். ஆதார் எண், மொபைல் எண், நாமினி விவரங்களுடன் அணுகலாம். ரூ. 320 க்கு ரூ. 5,00,000, ரூ. 559 க்கு 10,00,000, ரூ. 799 க்கு 15,00,000 என்ற வகைகளில் விபத்து பிரிமியம் தொகை செலுத்தி இந்த திட்டத்தில் இணையலாம்.புதுச்சேரியில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இத்திட்டத்தினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை அஞ்சல் அலுவலகம், அனைத்து அஞ்சலகங்களையும் அணுகலாம் அல்லது 9894881575 என்ற தொலை எண்ணில் புதுச்சேரி கிளை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி