உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காஞ்சியில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

திருக்காஞ்சியில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

வில்லியனுார் : திருக்காஞ்சி கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள வராகி அம்மன் சன்னதியில் பஞ்சமி திதியன்று நடக்கும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாகும்.வைகாசி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை