உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா 

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா 

திருக்கனுார்: செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 2023 - 24ம் ஆண்டு விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது.ஆசிரியர் ஜான் பெந்த கொஸ்த் வரவேற்றார். தலைமை ஆசிரியர் அனிதா தலைமை தாங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் மோகன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஆசிரியர் முரளிதரன் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மகேஸ் வரி, சித்தானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற் றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி