உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் நடந்த கலை மற்றும் உணவு திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்வி மற்றும் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பொறியியல், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கல்லுாரி சார்பில் மூன்று நாள் கலை, விளையாட்டு மற்றும் உணவுத் திருவிழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.துவக்க விழாவிற்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சேர்மன் ராமச்சந்திரன், விழாவை துவக்கி வைத்தார். மூன்றாம் நாள் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜீவ்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்வி குழுமத்தின் செயல் இயக்குனர் மவுஸ்மி ராஜ்கிருஷ்ணா, முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, இயக்குனர் ரத்தினசாமி மற்றும் பொது மேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லுாரி பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். உணவுத் திருவிழா அரங்கில் மாணவர்கள் சார்பில் பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி