உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடுத்த பிரதமரை அடையாளம் காட்டும் இடத்தில் ஸ்டாலின் வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் புகழாரம்

அடுத்த பிரதமரை அடையாளம் காட்டும் இடத்தில் ஸ்டாலின் வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் புகழாரம்

விழுப்புரம் : 'நாட்டின் அடுத்த பிரதமரை அடையாளம் காட்டும் இடத்தில், முதல்வர் ஸ்டாலின் உள்ளார்' என வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் பேசினார்.விழுப்புரம், அடுத்த வி.சாலையில் நேற்று இரவு நடந்த தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:பாசிச பா.ஜ., அரசை வீழ்த்தி, இந்தியாவை பாதுகாப்பதற்கான 'இண்டியா' கூட்டணியை, முதல்வர் ஸ்டாலின் வழி நடத்துகிறார். விழுப்புரம் தொகுதியில் வி.சி., போட்டியிட மீண்டும் ஒதுக்கிய முதல்வருக்கும், எனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் திருமாவளவனுக்கும் நன்றி.இது சாதாரண தேர்தல் இல்லை. ஜனநாயகத்தை மீட்கும் தேர்தல். அதற்காக 28 கட்சி கூட்டணியை உருவாக்கி, ஒருங்கிணைத்த பெருமை முதல்வர் ஸ்டாலினையே சேரும். 'இண்டியா' கூட்டணி நல்லாட்சி நடத்தும். அடுத்த பிரதமரை அடையாளம் காட்டும் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு பானை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ