உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்கள் தின விழா 

மாணவர்கள் தின விழா 

புதுச்சேரி: புதுச்சேரி, சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தின விழா நேற்று நடந்தது.  பள்ளியின் துணை முதல்வர் ராஜவேலு சுகந்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். விழாவில் பாடல், பேச்சு, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். மாணவி புவனேஸ்வரி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கவிதா நன்றி கூறினார். இதில், மாணவிகளுக்கு  இனிப்புகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !