உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தரப்பு கூட்டத்தை நடத்த கரும்பு விவசாயிகள் கோரிக்கை

முத்தரப்பு கூட்டத்தை நடத்த கரும்பு விவசாயிகள் கோரிக்கை

திருபுவனை: தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகிகளை அழைத்து முத்தரப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என, புதுச்சேரி ஈ.ஐ.டி., பாரி அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.ஒருங்கிணைப்புக்குழ தலைவர் முருகையன் தலைமையில் நிர்வாகிகள், புதுச்சேரி வேளாண்துறை இயக்குனர் வசந்தகுமாரை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு;சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு மானியத்துடன் அமைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும். பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை தடுத்திட சோலார் மின்வேலி அமைப்பதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் கரும்பு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளதால் இந்த மாநிலத்தில் உற்பத்தி செய்யும் கரும்புகளை அரசு உத்தரவோடு அருகாமையில் உள்ள தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த இடர்பாடுகளை போக்குவதற்கு தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகிகளை அழைத்து முத்தரப்பு கூட்டத்தை, கரும்பு அரவை பருவம் தொடங்குவதற்கு முன் நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பொருளாளர், ஜெயராமன், செயலாளர்கள் ஆதிமூலம், பாஸ்கர், ஜெயகோபி, ஜீவானந்தம், பழனி உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை