உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயிகளுக்கு சத்துமாவு வழங்கல்

விவசாயிகளுக்கு சத்துமாவு வழங்கல்

நெட்டப்பாக்கம்: மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடை விவசாயிகளுக்கு கறவை மாடுகளின் மேம்பாடு மற்றும் அதன் உற்பத்தி என்ற தலைப்பில் பண்ணை பள்ளி நிகழ்ச்சி நடந்து வந்தது. இதன் நிறைவு விழா கரிக்கலாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் செல்வமுத்து கறவை மாடுகள், ஆடு, கோழிகளுக்கு சத்து மாவு கலவை வழங்குவது குறித்து விளக்கினார். விவசாயிகளுக்கு சத்து மாவு, டானிக் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணன், ஊழியர்கள் குமணன், தம்புசாமி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ