உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தின விழா 

திருக்கனுார்:சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் சடகோபன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிலை ஆசிரியர்களின் கல்விப் பணியைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசினை வழங்கினார்.முன்னதாக , டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலக ஊழியர் மாவீரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி