மேலும் செய்திகள்
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது
22-Aug-2024
திருக்கனுார் : திருக்கனுாரில் குடும்பத் தகராறில் வாலிபர் லாரியின் குறுக்கே விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு திருக்கனுார் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர் அவரை பைக்கில் ஏறும்படி கையை பிடித்து இழுத்தனர். இதற்கு வாலிபர் மறுப்பு தெரிவித்ததால், அங்கு கூட்டம் கூடியது. பின், பைக்கில் வந்தவர்கள் அந்த வாலிபரின் தந்தை மற்றும் உறவினர் என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறிய வாலிபரை மீண்டும் அழைத்து செல்வதற்காக வந்திருப்பது தெரியவந்தது. ஆனால், அந்த வாலிபர் பைக்கில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்ததால், உறவினர் கோபமாக திட்டினார்.இதனால் மனமுடைந்த வாலிபர் திடீரென அவ்வழியாக வந்த லாரியின் குறுக்கே விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த உரக்கடையின் உள்ளே புகுந்து, பூச்சி மருந்தை குடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த வாலிபரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
22-Aug-2024