உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரியப்பாளையம் மேம்பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்

ஆரியப்பாளையம் மேம்பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்

வில்லியனுார் : ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று நேற்று இரவு சோதனை ஓட்டமாக வாகனங்கள் இயக்க அனுமதித்தனர்.புதுச்சேரி - விழுப்புரத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமைவாய்ந்த குறுகிய பாலத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.64 கோடி திட்ட மதிப்பீட்டில் எம்.என் குப்பம் முதல் இந்திரா சதுக்கம் வரையிலான சாலையினை அகலப்படுத்துதல், பலப்படுத்துதல் மற்றும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஓர் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு கடந்த 2022ம் ஆண்டு பிப் 11ம் தேதி புதுச்சேரி கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.தொடர்ந்து நடந்து வந்த ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றுப்பாலம் சுமார் 360 மீட்டர் துாரத்தில் 18 பியர்கள் (துாண்கள்) அமைத்து, அதன் மீது பீம்கள் மூலம் சாலை வசதி ஏற்படுத்தி உள்ளனர். பணிகள் நிறைவு பெற்று புதிய மேம்பாலத்தில் இருபகுதிகளிலும் நடைபாதை வசதிகள் ஏற்படுத்தி, கை பிடிகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் முடித்து, எல்.ஈ.டி மின் விளக்குகளும் அமைத்துள்ளனர்.புதிய பாலத்தில் பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாரான நிலையில் நேற்று இரவு சோதனை ஓட்டமாக பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை