| ADDED : ஜூலை 22, 2024 01:45 AM
புதுச்சேரி : திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏம்பலம், புதுநகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் இந்துமதி, 25; பிளஸ் 2 படித்துள்ளார். இவர் இடையார்பாளையத்தில் உள்ள ஐஸ்கீரிம் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் இந்துமதி, பிரசாந்திடம் விளையாட போக கூடாது என, கூறியுள்ளார்.இதை மீறி பிரசாந்த் நேற்று முன்தினம் காலை கிரிக்கெட் விளையாட சென்றார். இதனால் ஆத்திரமடைந்த இந்துமதி அவரது வீட்டில் இருந்த ஜன்னல் கம்பியில் துப்பட்டவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.