சிறுமி மாயம்
புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் சிறுமி கடத்தப்பட்டாரா என போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 19ம் தேதி மாலை 5.45; மணிக்கு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது உறவினர் உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதுன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சிறுமியை தேடிவருகின்றனர்.