உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் ேஷாரூமில் பணம் திருடியவர் கைது

பைக் ேஷாரூமில் பணம் திருடியவர் கைது

அரியாங்குப்பம் : பைக் ேஷா ரூமில் புகுந்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை இந்தியன் வங்கி அருகே உள்ள தனியார் பைக் ேஷாரூமில் கடந்த மாதம் 1ம் தேதி கண்ணாடி உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.8 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். ேஷாரூம் மேலாளர் புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ேஷாரூமில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.அதில் மர்ம நபர் ஒருவர் ேஷாரூம் இரும்பு ஷீட்டை பிரித்து, உள்ளே நுழைந்து, அலுவலக கண்ணாடியை சுத்தியால் உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடிவந்த நிலையில் நேற்று தேங்காய்த்திட்டு பகுதியில் நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.இதில் அவர் பைக் ேஷாரூமில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர் சென்னை அடுத்த வண்டலுார், ஓட்டேரி பகுதியை சேர்ந்த நந்து (எ) அப்புபெருமாள், 21; என தெரியவந்தது. அவர் மீது, சென்னை மடிப்பாக்கம், காஞ்சிபுரம் ஆகிய பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.போலீசார் அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை