உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் கத்தி வைத்து பொதுமக்களை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.முத்தரையர்பாளையம், பொறையாத்தம்மன் கோவில் தெருவில் கத்தி வைத்து கொண்டு பொதுமக்களை மிரட்டுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.அங்கு நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சாணரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், 24; என தெரியவந்தது. அவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ