உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளைஞர் விழாவில் பங்கேற்போர் முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து

இளைஞர் விழாவில் பங்கேற்போர் முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து

புதுச்சேரி, : ஒடிசாவில் நடக்கும் சர்வதேச பழங்குடியினர் இளைஞர் விழாவில் பங்கேற்க செல்லும் புதுச்சேரி குழுவினர் முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.ஒடிசா மாநிலம் பான்பூரில் உள்ள கிரித்தி பாஷா பவனில், சர்வதேச பழங்குடியினர் இளைஞர் கலை விழா வரும் 8ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவில் 41 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தியாவின் 25 மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அவரவர் நாட்டின், மாநில கலாசார நடனம், இசை பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.விழாவினை சத்தீஷ்கர் மாநில கவர்னர் பிஷ்வா பூஷன் அரிச்சந்திரன் துவக்கி வைக்கிறார். இதில் புதுச்சேரியை சேர்ந்த தேசிய இளைஞர் திட்ட மாநில செயலாளர் ஆதவன் தலைமையில் மனோ, ஜெயராஜ், தரணிதரன், குருபிரசாந்த், இளைஞர் திட்ட மகளிர் அணி மாநில தலைவி ஜெயப்பிரதா, யோகலட்சுமி, சந்திரிக்கா, லத்திகா உட்பட 9 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த குழுவினர் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து வாழ்த்து பெற்று, புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ