உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறையில் இருந்த ரவுடியை காவலில் எடுத்து விசாரணை

சிறையில் இருந்த ரவுடியை காவலில் எடுத்து விசாரணை

வில்லியனுார் : பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் சிறையில் இருந்த பிரபல ரவுடியை போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த 'ஆப்பரேஷன் திரிசூலம்' என்ற திட்டத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன், கணுவாப்பேட்டை அரசு பள்ளி எதிரே மூன்று நபர்கள் கஞ்சா பண்டல்களை வைத்து பங்கு பிரித்து கொண்டிருந்தபோது ரோந்து சென்ற போலீசார், பிடித்தனர். விசாரணையில் கோட்டைமேடு வினோத் (எ) வினோத்குமார்,24; பங்கூர் சதீஷ்குமார்,24; செம்பியர் பாளையம் தசரதன், 22, என, தெரிந்தது.மேலும், சதீஷ்குமார், ஒரு கொலை முயற்சி வழக்கில் சிறைக்கு சென்றபோது, பா.ஜ., பிரமுகர் செந்தில்குமரன் கொலை வழக்கில் சிறையில் இருந்த நித்தியானந்தன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.நித்யானந்தம் வழிகாட்டுதலின்படி, ஒடிசா மாநிலத்திற்கு சென்று கஞ்சா வாங்கி வந்து, வில்லியனுார் பகுதியில் விற்பனை செய்வதற்காக பங்கு பிரித்தபோது போலீசில் சிக்கியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.அவர்களின் வாக்கு மூலத்தின் படி, சிறையில் இருந்த நித்தியானந்தனை வில்லியனுார் போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.அதன்பேரில், நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, சிறையில் இருந்த நித்தியானந்தனை காவலில் எடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்டமாக அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தல் என மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை