காட்சிப்பொருளான ஹைமாஸ் விளக்கு
புதுச்சேரி: தவளக்குப்பம் மற்றும் கரிக்கலாம்பாக்கம் ஆகிய இரு இடங்களில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், விபத்துகளை தடுக்க மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவளக்குப்பத்தில் இருந்து, அபிேஷகப்பாக்கம் செல்லும் சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக எரியாமல் இருண்டு கிடக்கிறது. அந்த பகுதியில், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட நகர் பகுதியில் குடியிருப்பவர்கள், சாலையை கடந்து செல்லும் போது, இரவில், வாகன விபத்துக்களில் காயமைடைந்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் மது கடைகள் இருப்பதால், குடியிருப்பவர்கள் இரண்டு கிடக்கும் அந்த இடத்தில் மது குடிப்பதால், கிராம பகுதிகளுக்கு செல்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். அதே போல, கரிக்கலாம்பாக்கம் கோட்டைமேட்டு திடலில், பல மாதங்களாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. இரண்டு இடங்களில் எரியாமல் காட்சிப்பெருளாக உள்ள ஹைமாஸ் விளக்குகளை மின்துறை அதிகாரிகள் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.