உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரிடம் ரூ. 80 ஆயிரம் மோசடி

வாலிபரிடம் ரூ. 80 ஆயிரம் மோசடி

புதுச்சேரி : வாலிபரை மிரட்டி 80 ஆயிரம் ரூபாயை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் டேட்டிங் ஆப் மூலம் ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் பேசி வந்தார். இருவரும் பேசி வீடியோ காலை அந்த பெண் ரெக்கார்டு செய்தார். அந்த வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக, செந்தில்வேலை, அப்பெண் மிரட்டினார். வீடியோ காலை வெளியிடாமல் இருக்கு 1 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும் என, அப்பெண் கூறினார்.அதற்கு பயந்து, அவர், 80 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்கு மூலம் அனுப்பினார். அதையடுத்து, மர்ம கும்பல் பெண்ணை வைத்து வீடியோ கால் எடுத்து பணம் பறிக்கும் மோசடி கும்பல் என தெரியவந்தது. இதுறித்து, அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ