உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டம் கவர்னரின் கார் சிக்கியதால் பரபரப்பு

போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டம் கவர்னரின் கார் சிக்கியதால் பரபரப்பு

புதுச்சேரி, : கவர்னரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில் போக்குவரத்து பிரச்னை உச்சக்கட்டத்தில் உள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதால், காலை 8:30 மணிக்கே பிரதான சாலைகளில் டிராபிக் ஜாம் துவங்கி விட்டது. ராஜிவ் சிக்னல், கொக்குபார்க், இந்திரா சிக்னல்களில் கடும் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. கொக்குபார்க் சிக்னலில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், 4 பக்கமும் வாகனங்கள் முட்டி கொண்டு நகர முடியாமல் திணறியது. வெகு நேரதத்திற்கு பிறகு வந்த டிராபிக் போலீசால் ஓரளவு நிலைமை சீரானது. காலை 8:30 மணிக்கு துவங்கிய டிராபிக் பிரச்னை இரவு வரை நீடித்தது. காமராஜர் சாலை, வழுதாவூர் சாலை, நுாறடிச்சாலை, இ.சி.ஆர்., கோரிமேடு சாலை என 5 பக்கமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சிக்னலை கடந்து சென்றன. இந்திரா சிக்னலில் விளக்கு எரியாததால் எந்த பக்கம் வாகனங்கள் செல்ல வேண்டும் என தெரியாமல் வாகனங்கள் தாறுமாறாக சென்று நாள் முழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் மரப்பாலம் வழியாக அரிக்கன்மேடுக்கு ஆய்வு செய்ய சென்றார். வழக்கமாக கவர்னர் வரும்போது, டிராபிக் அனைத்தையும் நிறுத்தி வழி ஏற்பாடு செய்யப்படும். ஆய்வு முடித்து கவர்னர் திரும்பியபோது, முருங்கப்பாக்கத்தில் வழக்கமான டிராபிக்கில் கவர்னர் காரும் சிக்கியது. போக்குவரத்து போலீசார் என்ன செய்வது என தெரியாமல், அவசர அவரசமாக போக்குவரத்தை சரிசெய்து கவர்னர் காருக்கு வழி ஏற்படுத்தி அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ