மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி:வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு கடந்த 20ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.நேற்று தேர் திருவிழாவையொட்டி கவர்னர் ராதாகிருஷ்ணன் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து வரதராஜ பெருமாள், தாயார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.தேரோட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., ஆகியோரும் வடம்பிடித்து இழுத்து சாமிதரிசனம் செய்தனர்.காந்தி வீதியில் துவங்கிய தேரோட்டம், பெருமாள் கோவில் வீதி, பாரதி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. முன்னதாக தேரோட்டத்தில் பங்கேற்ற கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.விழாவில் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வரும் 25ம்தேதி தெப்ப உற்சவம், 28ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கின்றது.விழாவையொட்டிசுவாமிக்கு தினமும் சிறப்பு அபிேஷகம், அர்ச்சனை நடக்கின்றது.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago