மேலும் செய்திகள்
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்
28-Aug-2024
மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிப்பு தீவிரம்
21-Aug-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி, சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும், 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் தீவிரம் அடைந்துள்ளது.அரியாங்குப்பம் கைவினை கிராமத்தில் களிமண் விநாயகர் சிலைகள் பொதுமக்களை கவரும் வகையில், பல வண்ண நிறங்களில் தயார் நிலையில் உள்ளன. கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதேபோல, கூனி முடக்கு கிராமத்தில், மரவள்ளி கிழங்கு மாவு மற் றும் காகித கூழ் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்படும், விநாயகர் சிலைகள் 1 முதல் 31 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் சிலைகள், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.இந்தாண்டு புதிய வரவாக, சிவன் விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சிங்க விநாயகர், பால விநாயகர் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. வழக்கமான திருமூர்த்தி விநாயகர், பஞ்சமூர்த்தி விநாயகர், ராஜ விநாயகர் என, 30க்கும் மேற்பட்ட வகைகளில் விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இல்லாத வண்ணங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன.வழக்கத்தை விட, இந்தாண்டு சிலைகளின் விலை அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் இந்த விநாயகர் சிலைகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் உள்ளூரிலும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக, சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
28-Aug-2024
21-Aug-2024