உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேத்தாம்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளி ஆண்டு விழா

தேத்தாம்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி தேத்தாம்பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.விழாவில் புதுச்சேரி கல்வித்துறை 5ம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், ஜானகிராமன் ஆசிரியர்கள் செந்தில்குமார், மணிமாறன், பச்சையப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினர். பள்ளியின் பொறுப்பாசிரியர் குமரன் ஆண்டறிக்கை வாசித்தார்.மாணவர்களுக்கான பரிசு பொருட்களை பக்கிரி, ராமகிருஷ்ணன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஜெயராக்கினி, ரகு, மற்றும் ஊர் நாட்டாண்மைகள் அன்பளிப்பாக வழங்கினர். நிகழ்ச்சியில் வீரப்பன், கமலேஷ், சிவச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை