உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண உற்சவம் 

திருக்கல்யாண உற்சவம் 

திருக்கனுார் : கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் வரும் 22ம் தேதி நடக்கிறது.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.வரும் 22ம் தேதி திரவுபதியம்மன் சுவாமி திருக்கல்யாண உற்சவம், 24ம் தேதி காலை தேர் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக 25ம் தேதி காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் வழிபாடு, மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை