மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
புதுச்சேரி : பாண்டிச்சேரி தாங்-டா சாம்பியன்ஷிப் போட்டியின், பரிசளிப்பு விழா பிரிசிடென்ஸி பள்ளியில் நடந்தது. பாண்டிச்சேரி தாங்-டா மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், பாண்டிச்சேரி தாங்-டா சேம்பியன்ஷிப் போட்டி, ரெட்டியார்பாளையம் பிரிசிடென்ஸி(எலைட்) மேல்நிலைப் பள்ளியில் கடந்த 8ம் தேதி நடந்தது. அதன் பரிசளிப்பு விழாவில், பள்ளி முதல்வர் கிறிஸ்டிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வழக்கறிஞர்கள் ரீனா ஐஸ்வர்யா, விஸ்வசுந்தரம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தனலட்சுமி, பெங்களூர் விஷுவல் டிசைனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், டாக்டர் பிரிந்தா, பள்ளி துணை முதல்வர் ஆரோக்கியதாஸ், சந்தோஷ்குமார், ஏகாம்பரம் அருள்ராஜ், செல்வராஜ், சுரேஷ், கார்த்திகேயன், சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாண்டிச்சேரி தாங்டா மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் பொது செயலாளர் ஞானசேகரன் செய்திருந்தார்.
16-Aug-2024