| ADDED : ஜூன் 03, 2024 05:30 AM
புதுச்சேரி, : புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து பொழுதை கழித்தனர்.புதுச்சேரிக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளுடன், உள்ளூர் மக்களும் சுற்றுலா தளங்களில் குவிந்து விடுகின்றனர். கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் இரவு சூறை காற்றுடன் லேசான துாரல் மழை பெய்தது. அதனால் வெப்பம் சற்று தனிந்தது. நேற்று வெப்ப அளவு 94.3 டிகிரியாக பதிவானது.இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நேற்று மாலை கடற்கரையில் குவிந்தனர். கடற்கரை பாறை கற்கள் மீது அமர்ந்து கடற்கரை அழகை ரசித்தனர். குப்பை தொட்டி தேவை
கடற்கரையில் போதிய அளவிலான குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் பாணி பூரி, ஐஸ்கிரீம் சாப்பிடும் நபர்கள், பிளாஸ்டிக் கப், கவர்களை கடற்கரையில் வீசி செல்கின்றனர். இதனால் கடற்கரை முழுதும் குப்பை குவிந்து கிடக்கிறது.கடற்கரையில் கூடுதலாக குப்பை தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் கடற்கரை அழகை ரசிக்க அமைக்கப்பட்ட கருங்கல் இருக்கைகள் உடைந்து கிடக்கிறது. அவற்றை சரிசெய்து கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும்.