மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
3 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரியில் மதுபோதையுடன் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்து 6 பேர் உயிரிழந்தனர்.புதுச்சேரி முருங்கப்பாக்கம், சேத்திலால் நகரைச் சேர்ந்தவர் முருகன், 39; குடிபழக்கம் உடையவர். இவருக்கு இரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் வாங்கி சென்றார். மதியம் 3:00 மணிக்கு, முருங்கப்பாக்கம் அருள் பெட்டி கடை அருகே வெயில் காரணமாக மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.நெல்லித்தோப்பு சிக்னல் பள்ளிவாசல் அருகில் கடந்த 2ம் தேதி மதியம் 2:00 மணிக்கு, 60 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் வெயில் தாங்க முடியாமல் மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஞ்சிபுரம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 67; குடிப்பழக்கம் உடையவர். கடந்த 2ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து புதுச்சேரி வந்தவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு, மடுகரை மந்தவெளி பகுதியில் மதுபோதையில் சுயநினைவின்றி வெயிலில் கிடந்தார். ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் மருத்துவ கல்லுாரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.திருநள்ளார் மார்கெட் பகுதி மற்றும் அம்பகரத்துார் சாராயக்கடை அருகே 50 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத இருவர் நேற்று முன்தினம் மதியம் இறந்து கிடந்தனர். காரைக்கால் நகர பகுதி, பச்சூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே பகல் 12:00 மணிக்கு 65 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத நபர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago