மேலும் செய்திகள்
புதுச்சேரி பேராசிரியர் வீட்டில் 10 சவரன் நகை, பணம் கொள்ளை
16 hour(s) ago
அரசு பள்ளியில் புத்தக திருவிழா
17 hour(s) ago
டயாலிசிஸ் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான கருத்தரங்கு
17 hour(s) ago
புதுச்சேரி : இடைமாற்று அறுவை சிகிச்சை செய்த இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய மருத்துவ கழகம் மற்றும் பிரைடு ரோட்டரி சங்கம் சார்பில், ராவுத்தான்குப்பம் ஹெமரிக்ஸ கிராமிய நிலையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், 25 டாக்டர்கள் பங்கேற்றனர்.முகாமிற்கு ஆண்டியார்பாளையம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார், 35; என்ற வாலிபர் சிகிச்சைக்கு வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டிற்கு முன்பு வெல்டிங் வேலை செய்தபோது, தொடை - இடுப்பு பகுதி சேரும் இடத்தில் சிலிண்டர் விழுந்தது.இடுப்பில் அடிப்பட்ட அவர், 3 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தது தெரியவந்தது. மருத்துவ முகாமில் செல்வகுமாருக்கு பரிசோதனை செய்து கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.எலும்பு சிகிச்சை மருத்துவர் அருண் தலைமையிலான மருத்துவ குழுவினர், செல்வக்குமாருக்கு வெற்றிகரமாக இடை மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது செல்வக்குமார் நடமாடும் நிலைக்கு வந்துள்ளார். இந்த சிகிச்சைக்கு துணையாக இருந்த மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு, பிரைடு ரோட்டரி சங்க நிறுவனர் வைத்தியநாதன், சங்க தலைவர் மகேஷ், ஆலோசகர் மதிவாணன் ஆகியோர் சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, பாராட்டினர்.
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago