உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத பெண்ணுக்கு சிகிச்சை

அடையாளம் தெரியாத பெண்ணுக்கு சிகிச்சை

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத பெண் பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு அருகில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடந்த 10ம் தேதி மயங்கி கிடந்தார். அவர், இந்திரா காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய பெயர் ஜோதிலட்சுமி, 35. தந்தை பெயர் பழனி என கூறியுள்ளார். விலாசம் எதுவும் தெரியவில்லை. மேற்கண்ட பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை மக்கள் குறைதீர் அதிகாரி ரவி (93634-5115) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் (94880-74492) ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி