உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது

அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது

வில்லியனுார் : வில்லியனுார் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ரவுடி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி பின்புரம் இளைஞர்கள் கும்பலாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் கிரைம் போலீசார் கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி பின்புரம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டு தப்பிக்க முயன்ற இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் கூடப்பாக்கம் பேட் அம்பேத்கர் தெருவை சேர்ந்த காத்தவராயன் மகன் பிரபல ரவுடி கவி(எ) கவியரசன்,23; மற்றும் அதே பகுதி சேர்ந்த பூபாலன் மகன் சதீஷ்,19; என தெரியவந்தது. மேலும் அவர்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்த 160 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை