உப்பனாறு பாலம் பணிகள் கவனர், முதல்வர் துவக்கி வைப்பு
புதுச்சேரி: உப்பனாறு பாலத்தின் மீதமுள்ள பணியை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பூஜை செய்து துவக்கி வைத்தனர். புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், 29.25 கோடி ரூபாய் மதிப்பில் காமராஜர் சாலை முதல் மறைமலையடிகள் சாலை வரை உப்பனாறு பாலத்தின் மீதமுள்ள பணிகளை முடிக்கவும், பாலாஜி தியேட்டர் அருகேயுள்ள பழைய பாலத்தை மறுகட்டமைப்பதற்கான பணிகள் துவங்க விழா நேற்று நடந்தது.விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா முன்னிலை வகித்தனர்.பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயலாளர் சீனுவாசன், உதவி பொறியாளர் ராஜ்குமார், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.