உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரம் வேரோடு சாய்ந்ததால் பரபரப்பு

மரம் வேரோடு சாய்ந்ததால் பரபரப்பு

  புதுச்சேரி: புதுச்சேரி, ஆம்பூர் சாலை, புஸ்சி வீதி சந்திப்பில், திடீரென மரம் வேரோடு சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி ஆம்பூர் சாலை, புஸ்சி வீதி சந்திப்பில் நேற்ற காலை 10.40 மணியளவில் பழமையான புன்னை மரம் ஒன்று திடீரென சாலையில் குறுக்கே வேரோடு சாய்ந்தது. மரம் விழுந்ததில், அங்கு நிறுத்தியிருந்த டெம்போ சேதமடைந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து வந்த புதுச்சேரி தீயணைப்பு துறையினர், நிலைய அதிகாரி சுகுமார் தலைமையில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை வெட்டி அகற்றினர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரது பாதிக்கப்பட்டது. எப்போதும் பிசியாக காணப்படும் சாலையில் திடீரென மரம் வேரோடு சாய்ந்தது அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை