| ADDED : ஜூலை 22, 2024 01:40 AM
புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கூட்டு போராட்டக் குழுவின் செயற்குழு கூட்டம் நடந்தது.அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார்.புதுச்சேரி நகராட்சி கன்வீனர்களாக கலியபெருமாள், வேளாங்கண்ணிதாசன், குணசேகரன், ஆனந்தன், பாண்டியன்தேர்வு செய்யப்பட்டனர். உழவர்கரை நகராட்சி கன்வீனர்களாக நவசித்து, சகாயராஜ், கதிரேசன், இளங்கோவன், மன்னாதன், மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 01.01.2016 தேதியிட்டு ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். கடந்த 2004ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தின் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு விடுபட்ட பணி கொடைகளை வழங்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.இறந்தவர் மற்றும் மருத்துவ ஓய்வூதியம் பெற்ற வாரிசுதாரர்களுக்கு ஒருமுறை தளர்வு செய்து, கருணை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மாநிலங்களில் வழங்குவதை போன்று நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.