உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனைவரும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் உழவர்கரை நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

அனைவரும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் உழவர்கரை நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

புதுச்சேரி: அனைத்து கடை, நிறுவனங்களிலும் மழை நீர் சேகரிப்பினை ஏற்படுத்த வேண்டும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி மாவட்ட கலெக்டர் உள்ளாட்சி அமைப்புகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார். அதன்படி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைத்து பராமரித்து வர வீடுகள், அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழை நீர்கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.எனவே வரும் மழைக்காலத்திற்கு முன் அதாவது செப்டம்பர் மாத இறுதிக்குள் தங்கள் இடங்களில் மழைநீர் கட்டமைப்பை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும். அக்டோபர் மாதத்தில் உழவர்கரை நகராட்சி அலுவலர்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பார்வையிட்டு உறுதிசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.அனைத்து தரப்பினரும் மழைநீர் கட்டமைப்பை அமைத்து மழைநீரை சேமித்து நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கி சுற்றுப்புறசூழலை மேம்படுத்த உதவ வேண்டும்.மேலும் தங்கள் இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைத்துள்ளவர்கள் உழவர்கரை நகராட்சி அலுவலகத்தின் வாஸ்ட் ஆப் எண்- 7598171674 வாயிலாக தெரிவிக்கலாம், அப்படி மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துபவர்களுக்கு நகராட்சி சான்றிதழ் வழங்கப்படும். இது குறித்து தகவல் பெற வேளாண் துறையின் அதிகாரிகள் மனோகர்-9842558320, வெங்கடேசன்-9442291376, முத்தையன் - 9442290641 ஆகியோரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்