மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
08-Sep-2024
பாகூர்: பாகூர் அடுத்த சேலியமேடு ஆஞ்ஜநேயர் கோவிலில், மதுரகவி ஆழ்வார் சபை சார்பில்வரும் 15ம் தேதி, 30ம் ஆண்டு வைணவ மாநாடு நடக்கிறது.காலை 7:00 மணிக்கு கருட கொடி, திருவீதி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, கவுரவ தலைவர் ஜானகிராமன் கருடக்கொடியேற்றி வைக்கிறார். காலை 8:30 மணிக்கு ஆண்டாள் பஜனை குழுவினரின் திருமால் துதி நடக்கிறது. செயலாளர் சீனுவாச ராமானுஜதாசன் வரவேற்கிறார். துணை தலைவர் ரவி துவக்கவுரையாற்றுகிறார்.செயலாளர் விதுரன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். லட்சுமண ராமனுஜ சவாமிகள் தலைமையுரையாற்றுகிறார். காலை 9:15 மணிக்கு திருக்கோவிலுார் ஸ்ரீமத் ஜீயர், மடாதிபதி ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனம் நடக்கிறது. இம்மாநாட்டில், திண்டிவனம் வெங்கடேச ராமானுஜ தேசிக தாசர் சுவாமிகள், புவனகிரி கோகுலாச்சார்யார் சுவாமிகள், திண்டிவனம் ஆஷா நாச்சியார், வடுக்குப்பம் சாந்தலட்சுமி ராமச்சந்திரன், கும்பகோணம் குடந்தை வெங்கடேஷ் சுவாமிகள் உள்ளிட்டோரின் சொற்பொழிவு நடக்கிறது. தலைவர் வீரா ஆதிநாராயணன் ராமானுஜம் நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை, சேலியமேடு மதுரகவி ஆழ்வார் சபையினர் செய்துள்ளனர்.
08-Sep-2024