மேலும் செய்திகள்
மனைவிக்கு கொலை மிரட்டல்; கணவர் கைது
2 hour(s) ago
பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
2 hour(s) ago
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
2 hour(s) ago
அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி புதுச்சேரி: புதுச்சேரியில் காங்., வெற்றி பெறும் என காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பகல் கனவு காண்கிறார் என பா.ஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். பா.ஜ., சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்த பின்பு அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது; புதுச்சேரி மாநில மக்கள் பா.ஜ., வெற்றி உறுதி செய்துள்ளனர். பா.ஜ.,வுக்கு ஓட்டு அளிக்க மக்கள் தயாராகி விட்டனர். இளம் வேட்பாளர் வெற்றி பெற்றால், புதுச்சேரிக்கு தேவையான நலத்திட்டங்களை கொண்டு வர முடியும். நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும் எந்த திட்டத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வரவில்லை. புதுச்சேரியில் இருந்து ரயில் விட்டதை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. மாநில அந்தஸ்து பெற்று தரவில்லை. புதுச்சேரியில் காங்., வெற்றி பெறும் என வேட்பாளர் வைத்திலிங்கம் பகல் கனவு காண்கிறார் என கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago