உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வைத்திலிங்கம்

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வைத்திலிங்கம்

புதுச்சேரி : தமிழக முதல்வர் ஸ்டாலினை, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் சந்தித்து வாழ்த்து பெற்றார்.புதுச்சேரி லோக்சபா தேர்தல் தொகுதியில், வெற்றி பெற்ற, காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர், முதல்வர் ஸ்டாலினை, நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.சந்திப்பின்போது, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் பாரதி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் காங்., தலைவர் சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் தேவதாசு, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், தி.மு.க., தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், வடிவேல், சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் நவீன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை