உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உருளையன்பேட்டை தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., நன்றி தெரிவிப்பு

உருளையன்பேட்டை தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி., நன்றி தெரிவிப்பு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி வாக்காளர்களுக்கு, புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., நன்றி தெரிவித்தார்.புதுச்சேரி லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி சார்பில், காங்., மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவர் அதிக ஓட்டுகள் அளித்த உருளையன்பேட்டை தொகுதி வாக்காளர்களுக்கு திறந்தவெளி ஜீப்பில் வீதி, வீதியாக சென்று நன்றி தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் கோபால் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்வில் உருளை யன்பேட்டை தொகுதி செய லாளர் சக்திவேல் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை