மேலும் செய்திகள்
குழந்தைகளின் ஆரோக்கியம் கலெக்டர் அறிவுறுத்தல்
29-Jul-2026
புதுச்சேரி: புதுச்சேரி, தந்தை பெரியார் நகர், பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும் காய்கறி சந்தை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் குழந்தைகள் பல்வேறு காய்கறிகளை அடையாளம் கண்டு, அவற்றின் பெயர்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் கற்றுக்கொண்டனர். காய்கறிகளின் நிறம், வடிவம், அளவு, பயன்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறித்து அடிப்படை அறிவையும் பெற்றனர். சந்தைச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட வாங்குதல் – விற்பனை செயல்பாட்டில் குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர். பணப் பரிமாற்றம், பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், விலை கேட்டல், உரையாடல் மற்றும் சமூகத் தொடர்பு போன்ற அன்றாட வாழ்க்கைத் திறன்களை செயல்முறை அனுபவத்தின் மூலம் பயிற்சி செய்தனர். நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் புவனா வாசுதேவன் தலைமை தாங்கி, பெற்றோர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குழந்தைகளுக்கு பாக்கெட் உணவுகள், செயற்கை நிறமிகள் கலந்த உணவுகள் மற்றும் நகர்ப்புற (ஜங்க்) உணவுகளைத் தவிர்த்து, இயற்கையான சத்தான வீட்டுச் சமைப்பையே வழங்குமாறு வலியுறுத்தினார். குறிப்பாக ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் வளர்ச்சியில் குடல் ஆரோக்கியமும், மூளை வளர்ச்சியும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதையும் விளக்கி, சத்தான உணவே சிறந்த மருந்து என்றார்.
29-Jul-2026