மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி: பட்ஜெட் மீதான விவாதத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசியதாவது:நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை சிறப்பான முறையில் முதல்வர் தாக்கல் செய்துள்ளார். மாநில வளர்ச்சி, மாநில மக்களின் நலன் என்ற வகையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம். விவசாயத் துறையை பொருத்தவரை பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இலவச அரிசி வழங்கப்படும் என்பதுடன், மான்ய விலையில் பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்களுக்கு இனிப்பான செய்தியாகும். அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்திற்கு மாற்றியது மிகப் பெரிய சாதனை. ஏழை எளிய மாணவர்களும் தரமான கல்வியை பெற முடியும் என்பதால் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். அரசு கல்லுாரிகளில் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விளையாட்டில் சாதனை படைக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். புதிய விளையாட்டு அரங்கங்களை சர்வதேச தரத்தில் கட்ட வேண்டும்.மீன்பிடி தடைக்கால நிவாரணம் 8000 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு மீனவ மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் பொறியியல் கல்லுாரிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்துவிட்டு, வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர். எனவே, புதுச்சேரியில் ஐ.டி., பார்க் அமைக்க வேண்டும். தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை புதுச்சேரியில் நடத்தினால் ஆயிரம் கோடி ரூபாயாவது முதலீடு கிடைக்கும். இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அனைத்து திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளுக்கும் மிக்க நன்றி. பாதியில் நிற்கக்கூடிய அனைத்து மக்கள் நல திட்டங்களையும் நிறைவேற்றி, பிரதமர் மோடி கூறியது போன்று பெஸ்ட் புதுச்சேரியாக உருவாக்க வேண்டும்'என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago