மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
19 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
19 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
19 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
19 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில், சைக்கிளில் வந்து புல்லட்டை மர்ம நபர் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.புதுச்சேரியில் இரு சக்கர வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குடியிருப்புகள், சாலைகள், பொதுஇடங்களில் வாகனங்களை நிறுத்தவே, பொதுமக்கள் அஞ்சும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், தட்டாஞ்சாவடி பகுதியில் நடந்த பைக் திருட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில், ஜிப்மரில் முதுநிலை மருத்துவம் படிக்கும், மருத்துவ மாணவர் வசித்து வருகிறார்.அவர், கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய, புல்லட்டை தான் வசிக்கும் வீட்டின் முன், இரவு நேரத்தில், நிறுத்தி வைத்திருந்தார். காலையில், பார்த்த போது, புல்லட்டை காணமால் அதிர்ச்சியடைந்தார். அவரது தெருவில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆராய்ந்தார். அதில், அந்த தெருவழியாக நள்ளிரவில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு, சைக்கிள் ஓட்டி வந்த நபர், அவரது புல்லட்டை லாவகமாக திருடி செல்லும் காட்சி, பதிவாகி உள்ளது. இதையடுத்து, அவர், டி.நகர் போலீசில் புகார் அளித்தார். சி.சி.டி.வி., காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புல்லட் திருட்டு வீடியோ, சமூக வலைதளங்களில், வைரலாகி வருகிறது.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago