உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விஜய் ஜூவல்லரி 51ம் ஆண்டு துவக்க விழா

விஜய் ஜூவல்லரி 51ம் ஆண்டு துவக்க விழா

புதுச்சேரி:: புதுச்சேரி விஜய் ஜூவல்லரியில் 51ம் ஆண்டு துவக்க விழாவை, முன்னிட்டு, சிறப்பு சலுகையில், வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டது.புதுச்சேரி, வைசியால் வீதியில், விஜய் ஜூவல்லரி உள்ளது. இதன் 51ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மூன்று நாட்கள் சிறப்பு சலுகையில், ஒரு காரட் வைரத்திற்கு, ஒரு கிராம் தங்கம் பரிசாக நகைகள் விற்பனை செய்யப்பட்டது. துவக்க விழாவை, உரிமையாளர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். இந்த சிறப்பு சலுகையில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என பலர் ஜூவல்லரிக்கு வந்து வைர மற்றும் தங்க நகைகளை வாங்கி சென்றனர்.இதுகுறித்து, ஜூவல்லரி உரிமையாளர், ராஜ்குமார் கூறுகையில், 'விஜய் ஜூவல்லரின் 51ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சிறப்பு சலுகையில், வாடிக்கையாளர்களுக்கு வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்தில், தரமான தங்க நகைகள், உயர்தர வைர நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது' என்றார்.ஜெயந்த், சங்கர் ஆகியோர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை