உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு நடைபயிற்சி

ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு நடைபயிற்சி

புதுச்சேரி : புதுச்சேரி ஐ.ஆர்.பி.என் பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, ஸ்டேஷன் எல்லைப் பகுதிகளில் நேற்று நடைப்பயிற்சி மேற்கொண்டனர். புதுச்சேரியில் கடந்த 2005ம் ஆண்டு ஐ.ஆர்.பி.என்., பிரிவு உருவாக்கப்பட்டது.இதில், 800க்கும் மேற்பட்ட ஐ.ஆர்.பி.என்.,கள் பணியாற்றி வருகின்றனர். ஐ.ஆர்.பி.என்., போலீசார் போதிய உடற்பயிற்சி இல்லாததால், பலர் உடல் ரீதியான பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் 2 போலீஸ்காரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தனர். பல ஐ.ஆர்.பி.என்., போலீசார் தொப்பையுடன் உலா வருகின்றனர். இதனால் முன்னாள் முதல்வர், எஸ்.பி., உதவி கமாண்டன்ட் வீடுகளில் பணியாற்றி வரும் ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு உடற்பயிற்சி அளிக்க டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார். முதற்கட்டமாக போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றும் 70 ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு நேற்று நடை பயிற்சி நடந்தது.ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் திரண்ட ஐ.ஆர்.பி.என்., போலீசார் வம்பாக்கீரப்பாளையம், வாணரப்பேட்டை மற்றும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை