| ADDED : மே 27, 2024 05:06 AM
பாகூர்: இளம் பெண்ணிடம் மொபைல் போனில், ஆபாசமாக பேசிய சென்னை வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பாகூர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது பெண். புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி., படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மொபைல் போன் எண்ணிற்கு, மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு ஆபசமாக பேசி உள்ளனர். இதனால், மனமுடைந்த அப்பெண் இது குறித்து பாகூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி னர். அதில், இளம் பெண்ணுக்கும், அவரது தோழிக் கும் இடையே முன்விரோதம் இருந்து வரும் நிலையில், தோழியின் நண்பர்கள், அவரை பழிவாங்கும் நோக்கில், மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியது தெரியவந்தது.இது தொடர்பாக, சென்னையை சேர்ந்த அருண், அஜய் ஆகியோரை தேடி வருகின்றனர்.