உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் செயற்குழு கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் செயற்குழு கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி அனைத்து மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்திய மாத உதவித் தொகை ஆயிரம் ரூபாயை வரும் ஜூலை மாதம் முதல் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வருமான உச்ச வரம்பு முற்றிலும் நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை வெளியிட வேண்டும். மூன்று சக்கர மோட்டார் சைக்கிளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை