ஆபாச பேச்சு வாலிபர் கைது
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மடுகரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். வி.அகரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், 28, என்பவர், மது போதையில், மடுகரை – சிறுவந்தாடு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.