உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

புதுச்சேரி: கஞ்சா விற்ற  வாலிபரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். கணுவாப்பேட்டை சாமியார்தோப்பு பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், சாமியார்தோப்பு பகுதியைச் சேர்ந்த கலையரசு 25, என்பதும், அவர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !