உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற இளைஞர் கைது

கஞ்சா விற்ற இளைஞர் கைது

வில்லியனுார்: வில்லியனுார் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வில்லியனுார் அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள ராயல் முருகன் சிட்டியில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில்  கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசாரை கண்டு அங்கிருந்த இளைஞர் தப்பிச்செல்ல முயன்றார். அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். பாக்கெட்டில் வைத்திருந்த சிறு சிறு பாக்கெட்டுகளாக வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  மேலும் விசாரணையில் அவர்,  மங்கலம் கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் பாஸ்கர்,21; என தெரியவந்தது. அதனை தொடர்ந்து பாஸ்கர் மீது வழக்குப் பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி