உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் சிறையில் அடைப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் சிறையில் அடைப்பு

காரைக்கால்: காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.காரைக்காலில், கடந்த 2015ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோட்டுச்சேரி, திருவேட்டக்குடி, கன்னிகோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு காரைக்கால் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நீதிபதி, குற்றவாளி பிரகாஷிற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, ஆயிரம் அபராதம் விதித்தார்.இதை எதிர்த்து பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நீதிமன்ற தண்டனையை உயர்நீதிமன்ற உறுதி செய்தது.அதன் அடிப்படையில் பிரகாஷிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை, திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி மோகன், குற்றவாளி பிரகாஷிற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து மீதம் உள்ள தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து பிரகாஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை