மேலும் செய்திகள்
ரகளை வாலிபர் கைது
23-Dec-2025
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். ஐ.டி.ஐ., செல்லும் சாலையில் வாலிபர் மது போதையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்பவர்களை அவதுாறாக பேசி, ரகளையில் ஈடுபட்டார். அவரை பிடித்து விசாரித்தனர். அவர், சண்முகாபுரத்தை சேர்ந்த பிரபு, 25; என்பது தெரியவந்தது. அவரை போலீசார்கைது செய்தனர். மேலும், தர்மாபுரி பகுதியில் போதையில் ரகளை செய்த சொக்கநாதன்பேட்டை வெங்கடேசன், 29; முத்தியால்பேட்டை, முருகன் வீதியில் ரகளை செய்த அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன், 31, விக்னேஷ், 20, பிரதீஷ், 19, தேங்காய்திட்டுதுறைமுகம் அருகே ரகளை செய்த காராமணிக்குப்பத்தை சேர்ந்த தாமோதரன், 24, முதலியார்பேட்டையை சேர்ந்த விஷ்வா, 21, வாணரபேட்டையை சேர்ந்த சரவணன்குமார், 24, துளசிராமன், 20, வில்லியனுார் பகுதியில் ரகளை செய்த மணி, 25, ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
23-Dec-2025